காங்கிரஸும் – திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணியமைத்தே பல தேர்தல்களை சந்தித்து வருகின்றன. தொகுதி பங்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரத்தில் ஆதங்கப்பட்டு வந்தாலும் கூட்டணி ஒப்பந்தத்தினால் தங்களை சமாதானப்படுத்திக்கொண்டும், மேலிட வழிகாட்டுதலின் படியும் தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற சென்று விடுவார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் அன்மையில் தனது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசும் போது தேர்தல்களில் கூட்டணி வெற்றி பெற என்னதான் திராவிட முன்னேற்றக் கழகம் முக்கிய காரணமாக இருந்தாலும் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் பங்கும் அதிகமாகவே உள்ளது என்றார்.
அதோடு அடுத்து வரும் தேர்தல்களில் தொண்டர்கள் வெற்றியை மட்டுமே குறிவைத்து உழைக்காமல் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும், உள்ளாட்சி பிரதி நிதிகளை அதிகப்படுத்த வேண்டும் என உந்துதல் கொடுக்கும் வார்த்தைகளால் உற்சாக தீயை கூட்டத்தில் இருந்தவர்கள் மனதில் பற்ற வைத்தார்.
அதே போல 2029ம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர் இது குறித்து கேட்டதற்கு யாருடைய உதவி இல்லாமலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைக்கும்.
முதல்வர் ஸ்டாலினின் செய்து வரும் சீரிய பணிகள் தான் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்றார். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளுடனான அரவணைப்பு தொடரும் என்றார். துணை முதல்வராக அமைச்சர் உதய நிதி வருவதையே கட்சியினர் விரும்புவதாகவும் அமைச்சர் பேசியிருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…