Categories: indialatest news

வேலை நேரத்தில் கேண்டி கிரஷ்… வீட்டுப்பாடத்தினை வைத்தே ஆசிரியைக்கு வைக்கப்பட்ட செக்!…

அரசு பள்ளிகளில் பெரும்பாலும் அதிகாரிகள் திடீர் ஆய்விற்கு வருவது இல்லை. அவர்கள் வர இருப்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடுவதால்  தவறு செய்யும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் பெரிதாக வெளிவருவதில்லை. ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பள்ளிக்கு சென்று ஆசிரியை கையும் களவுமாக பிடித்திருக்கிறார் மாவட்ட நீதிபதி.

உத்திர பிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாவட்ட நீதிபதி ராஜேந்திர பன்சியா சென்று இருக்கிறார். இதைத்தொடர்ந்து அப்பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடம் நோட்டை வாங்கி பார்க்கும்போது முதல் பக்கத்திலேயே தவறு இருந்திருக்கிறது. அதை ஆசிரியை கவனிக்காமல் திருத்தி இருக்கிறார்.

இப்படி அவர் சோதனையிட்ட ஆறு மாணவர்கள் நோட்டில் இருந்து மட்டுமே 95க்கும் அதிகமான தவறுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியானவர் உதவி ஆசிரியை பிரியம் கோயலின் மொபைலை வாங்கி சோதனை செய்து இருக்கிறார். இதில் அந்த ஆசிரியை வகுப்பு நேரத்தில் இரண்டு மணி நேரம் கேண்டி க்ரஷ் கேம் விளையாடியது தெரிந்தது.

இதை எடுத்து இப்பிரச்சினையை மாநில கல்வித் துறைக்கு எடுத்துச் சென்ற நீதிபதி தன்னுடைய ஆதாரங்களையும் வழங்கியிருக்கிறார். இதனை அடுத்து ஆசிரியை பிரியம் கோயில் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து பேசிய நீதிபதி, மொபைல் போன்கள் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் பள்ளி நேரத்தில்  பொழுதுபோக்காக பயன்படுத்துவது தவறு எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

AKHILAN

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

3 days ago

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

3 days ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

3 days ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 days ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

3 days ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

3 days ago