பெரும்பாலும் டிவி நிகழ்ச்சி என்னத்துக்கு பயன்பட போகுது எனக் கூறுவதை தான் கேட்டு இருப்போம். ஆனால் ஒரு நிகழ்ச்சியால் உயிர் போகும் பிரச்னையில் சிக்கிய இரு இளைஞர்கள் உயிர் பிழைத்து வந்துள்ளனர்.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபல நிகழ்ச்சி மேன் vs வைல்ட். இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். காடுகள், பள்ளத்தாக்கு உள்ளிட்ட மனிதன் வாழ முடியாத கடுமையான சூழலில் இருப்பதை படமாக எடுத்து அங்கு வாழ்ந்து காட்டுவார்.
நாம் செல்லவே முடியாத பகுதியை காண மனிதனுக்கு எப்போதுமே ஆர்வம் வரும். அதனாலே man vs wild நிகழ்ச்சி இளைஞர்களிடம் ரொம்பவே பிரபலம். மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ரஜினிகாந்த், ரன்வீர் சிங், அக்ஷய் குமார் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டிஷ் தொகுப்பாளினி கேத்ரின் என்பவரின் மகன்களான மேத்யூ(22) மற்றும் ஆண்ட்ரூ (18) இருவரும் இந்தோனிஷியாவின் பாலி தீவில் இருந்த எரிமலையை காண சென்றுள்ளனர். ஆனால் காடு வழியே சென்றவர்களுக்கு திடீரென வழி மறந்துவிட்டது. இருவருக்கும் பயம் வந்தாலும் பதறாமல் யோசித்துள்ளனர்.
பியர் கிரில்ஸ் இந்த சூழலில் எப்படி சமாளிப்பார் என்பதை நினைவு கூர்ந்தனர். அங்குள்ள குச்சிகளை சேகரித்து கூடாரம் அமைத்துள்ளனர். பின்னர் மழைநீரை சேகரித்து 30 மணி நேரமாக வாழ்ந்துள்ளனர். பின்னர் மீட்புக்குழுவால் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…