தஞ்சாவூரில் போக்குவரத்து மிகுந்த மருத்துவக் கல்லூரி சாலையில் இளைஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரீராம், தஞ்சாவூர் மங்களபுரம் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு ஜிகர்தண்டா கடையில் வேலை செய்து வந்தார். நேற்றிரவு 8 மணியளவில் ஸ்ரீராமின் கடைக்கு 6 பேர் கொண்ட கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தது.
அந்த கும்பலைப் பார்த்தவுடன் ஸ்ரீராம் கடையில் இருந்து வெளியேறி தப்பியோட முயன்றிருக்கிறார். ஆனால், அவரை துரத்திச் சென்ற கும்பல் சிறிது தூரத்திலேயே அவரை வழிமறித்து அரிவாளால் கொடூரமாகத் தாக்கியது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீராம் மயங்கி சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து சாவகாசமாகத் தப்பிச் சென்றிருக்கிறது.
ஸ்ரீராமின் உடல் மருத்துவக் கல்லூரி சாலையில் கிடப்பது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகிலுள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள்.
இவர், கடந்த 2022-ல் கொலை செய்யப்பட்ட மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் லாரா என்கிற சின்னா கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றவர். பிணையில் வந்த இவர் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஸ்ரீராம் கொலை, சின்னா கொலைக்குப் பழி வாங்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்டதா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…