Categories: Cricketlatest news

வீழ்ந்து போன வெஸ்ட் இண்டீஸ் அணி!.. வேர்ல்ட் கப் ஹீரோ ஜிரோ ஆனது எப்படி தெரியுமா..?

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு காலத்தில் எதிர் அணிகளே பயப்படும் அளவிற்கு பலம் வாய்ந்த அணியாக இருந்தது. 1975 மற்றும் 1979 என அடுத்தடுத்து உலக கோப்பை வென்று கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக இருந்தது. இப்படி இரு உலகக் கோப்பை வென்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் கால் பதிக்காமலேயே வெளியேறியுள்ளது.

wi team 4

இது வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இப்படி நடப்பது வரலாற்றில் இது முதல் முறையாகும். 13ஆவது உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடாமல் போனது கிரிக்கெட் உலகில் ஒரு கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது என வர்ணனையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அசந்தது எங்கே வீழ்ச்சிக்கு என்ன காரணம் :

இந்தியாவில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் துவங்குகிறது. இதில் ஐசிசி தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெற்று விடுவார்கள். மற்ற இரண்டு அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படும். தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்ரீலங்கா போன்ற அணிகள் பங்கு பெற்றன. ஜிம்பாப்வே,நேபாளம்,நெதர்லாந்து,அமெரிக்கா போன்ற அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் இடம் பெற்றது. இரண்டு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி ஆவார்கள்.

wi team 2

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதியான வெஸ்ட் இண்டீஸ் அணி சிம்பாபே,நெதர்லாந்து அணிகளுடன் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது. இந்நிலையில்தான் ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது . போட்டி ஆரம்பித்த முதலிருந்தே ஸ்காட்லாந்து பக்கம் சாய ஆரம்பித்தது. அதன்படி ஆட்டத்தின் முடிவும் வெஸ்ட் இண்டீஸ் தலையெழுத்தையே மாற்றி விட்டது. ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. இதனால் இரண்டு புள்ளிகள் குறைந்து புள்ளி பட்டியல் கடைசி இடம் கிடைத்தது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெறும்.

wi team 3

முன்னதாக இலங்கை மற்றும் சிம்பாப்வே அணி கூடுதல் புள்ளிகளுடன் முன்னிலை வகிப்பதால் மீதம் இருக்கும் போட்டியில் வென்றால் கூட வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பை விளையாட தகுதி பெற முடியாது. இதனால் 2023 உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடும் வாய்ப்பை இழந்தது. இதே போல தான் 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வாழ்வா சாவா என்ற நிலைமைக்கு ஆளானது. ஆனால் அப்பொழுது நடைபெற்ற போட்டியில் வென்று உலக கோப்பைக்கு விளையாடும் வாய்ப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சிக்கு காரணம் :

வெஸ்ட் இண்டீஸ் இந்த நிலைமைக்கு காரணம் வீரர்கள் மட்டுமல்ல. அந்நாட்டும் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் சூழலுக்கு ஏற்ப தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. முன்னாள் வீரர்களான விவி ரிச்சர்ட் , லாய்டு போன்ற ஜாம்பவான்கள் களத்தில் இருந்து ஒற்றை ஆளாக வழிநடத்தினர். கோப்பைகளையும் வென்று கொடுத்தனர். ஆனால் ஸ்காட்லாந்து ஜிம்பாவே,நெதர்லாந்து போன்ற அணிகளுடன் ஏற்பட்ட தோல்வி வெஸ்ட் இண்டீஸ் மதிப்பை சர்வதேச அளவில் குறைத்துள்ளது.

வீரர்களின் குற்றச்சாட்டு :

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்களான டிவைன் பிராவோ மற்றும் சமி ஆகியோர் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அதாவது அந்நாட்டு அரசு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் மீது அக்கறை கொள்ளாமல் இருப்பதால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளது. வீரர்களின் நிறைகளையும் குறைகளையும் கிரிக்கெட் வாரியம் காது கொடுத்து கேட்காததன் விளைவு என்றும் வீரர்களுக்கு போதிய சம்பளம் வழங்காததும். வீரர்கள் பயிற்சி செய்ய முறையான மைதானம் இல்லாததாலும் தான் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

bravo

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் உள்ளூர் தொடர்களை விட வெளிநாட்டு தொடர்களில் அதிகம் விளையாடு வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் போன்ற லீக் போட்டியில் நல்ல வரவேற்பும் அதிக சம்பளம் கிடைப்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தேசிய அணிக்காக முக்கியத்துவம் கொடுக்காமல் டி20 தொடர்கள் நடத்தும் தனியார் அணிக்காக ஆடுவதில் கவனம் செலுத்தினர். இதுவே வெஸ்ட் இண்டீஸ் சரி விற்கு பிரதான காரணமாக அமைந்தது.

sathish G

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago