Connect with us

latest news

சிகரெட் கம்பெனிக்கும், பல்கலை-க்கும் வித்தியாசம் இல்லையா..? என்ன விளக்கம் இது… உயர்நீதிமன்றம் கேள்வி…!

Published

on

சிகரெட் கம்பெனியும், பல்கலைக்கழகமும் ஒன்னா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கின்றது.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தான் சித்த மருத்துவ கிளினிக் நடத்துவதில் தலையிடக்கூடாது என்று தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை செய்தபோது தமிழக பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க முடியாது என்று சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் பாதிக்கப்பட்டது . இதை கேட்ட நீதிபதிகள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகின்றது.

சிகரெட் கம்பெனிக்கும் தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா? சிகரெட் கம்பெனி தான் புகை பிடிக்காதீர்கள் என்று சிறிய அளவில் எழுதி இருக்கும். அதுவும் இதுவும் ஒன்றா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றது. மேலும் யுஜிசி இடம் உரிய அனுமதி பெற்றுள்ளதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.  அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால் ஏன் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கையை பரிந்துரைக்க கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கின்றார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *