Connect with us

latest news

விஷச்சாராய விவகாரம்! – மருத்துவமனையிலிருந்து தப்பி சென்றவர் உயிரிழப்பு!…

Published

on

kallakurichi

2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க இந்த செய்தி தமிழகமெங்கும் பரவியது. அப்படி இறந்து போன சிலரின் இறப்புக்கு போன சிலரும் அங்கு கள்ளச்சாராயம் குடித்திருக்கிறார்கள். அதன்பின் அவர்களும் வாந்தி, மயக்கம், வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மொத்தமாக 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

எனவே, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கபபட்டனர். சிகிச்சை பலின்றி பலி எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போனதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. நேற்று வரை 50 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒரு பாக்கெட் மட்டும் சாராயம் குடித்த 50 பேரை மருத்துவர்கள் டயாலிசிஸ் செய்து காப்பாற்றிவிட்டனர்.

ஆனால், 2 பாக்கெட் குடித்தவர்கள் பலரும் இறந்து போனார்கள். 10 பேருக்கு பார்வை போய்விட்டது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் அருந்திய சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விஷமாக மாறியதும், கெட்டுப்போன மெத்தனாலை ஆந்திராவிலிருந்து வாங்கி இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில், விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேஷ சமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சற்று உடல் நலம் தேறியதால் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையிலிருந்து சென்றுவிட்டர். அதன்பின் உடல்நிலை மோசமாகி வீட்டில் மரணமடைந்திருக்கிறார்.

google news