Categories: latest news

என் ஃப்ரண்டை போல யாரு மச்சான்… யானைகளின் விநோத செல்லப்பெயர் பழக்கம்!

ஆப்பிரிக்க யானைகள் தங்கள் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு யானைகளையும் செல்லப் பெயரிட்டு தனித்த ஓசையோடு அழைக்கும் வழக்கம் கொண்டவையாக இருக்கின்றன என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கென்யாவின் சாம்ப்ரூ தேசிய பூங்காவில் 1986 – 2022 வரையில் நடத்தப்பட்ட ஆய்வில் யானைகளின் இந்த வழக்கம் பற்றி முதல்முறையாக வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. டால்பின்கள் மற்றும் கிளிகள் ஆகியவை தங்களுக்கு நெருக்கமானவற்றை அழைக்க, அவற்றின் விநோத ஓசைகளைப் பயன்படுத்துவது ஏற்கனவே ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஆனால், யானைகளைப் பொறுத்தவரை மனிதர்கள் தங்கள் நண்பர்களுக்கு செல்லப்பெயரிட்டு அழைப்பது போன்று தனித்தனி ஓசைகள் மூலம் தங்களுக்கு நெருக்கமான யானையை அழைப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. மனிதரல்லாத ஒரு விலங்கு இவ்வாறான ஓசைகள் வாயிலாக குறிப்புகளைக் கடத்துவது இதுவே முதல்முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதுகுறித்து பேசிய ஆய்வாளர் மைக்கேல் பார்டோ, `கென்யா தேசிய பூங்காவில் இருக்கும் இரண்டு யானைக் கூட்டங்கள் எழுப்பிய ஒலிகளை செயற்கை நுண்ணறிவு அல்காரிதம் கொண்டு ஆய்வு செய்ததில் இந்த முடிவு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு யானையும் தங்களின் நெருக்கமான யானைகளை அழைக்க பிரத்யேக ஓசைகளை எழுப்புகின்றன.

அத்தோடு, அழைப்பைப் பெறும் யானைகள் அதற்கான பதிலையும் ஓசைகளின் வழியே கடத்துவதோடு, அந்த ஓசைகளை மற்ற யானைகள் சரியாக அடையாளம் கண்டுகொள்வதும் தெரிய வந்திருக்கிறது’ என்றார். இந்த ஆய்வில், யானைகளின் 469 விதமான பிரத்யேக ஒலிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இதில், 111 யானைகள், தங்கள் நெருக்கமான யானைகளுக்கு அழைப்பு விடுத்ததையும், 117 யானைகள் அதற்கான பதில் ஒலி எழுப்பியதையும் ஆய்வாளர்கள் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஐபிஎல்லில் அதிக பிராண்ட் வேல்யூ – முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கேவின் மதிப்பு தெரியுமா?

AKHILAN

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago