இந்தியாவில் மொத்தம் 8 கார்டுகள் மக்களுக்கு மிகவும் முக்கியமானவை என்று கூறப்பட்டுள்ளது. அதை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் தற்போது பொதுமக்களுக்கு அரசு தரப்பில் பல்வேறு கார்டுகள் வழங்கப்பட்ட வருகின்றன. இந்த கார்டுகள் பொதுமக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை கொடுத்து வருகின்றது. இந்தியாவில் இப்போது புழக்கத்தில் எட்டு முக்கியமான கார்டுகள் இருக்கின்றது. அதில் ஓன்று விவசாயிகளுக்காக கிஷான் கார்டு. விவசாயிகளின் நில விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களும் இந்த அட்டையில் இருக்கும்.
இந்த அட்டையின் மூலம் பிஎம் கிஷான் சம்மன் நிதி யோஜனா மற்றும் விவசாய இழப்பீடு போன்ற அரசின் திட்டங்களின் பலன்களை விவசாயிகள் எளிதில் பெற முடியும். அடுத்ததாக ஏபிசி கார்டு அதாவது அகாடமிக் பேங்க் ஆப் கிரெடிட் கார்டு என்பது கல்வித்துறையில் ஒரு முக்கியமான கார்டாக பார்க்கப்படுகின்றது. இந்த அட்டை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாகவும் குறிப்பாக ஆன்லைன் படிப்புகள் அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுபவர்களுக்கு இது முக்கியமானது.
மாணவர்களின் அனைத்து கல்வி பதிவுகளுக்கு மதிப்பெண்களுக்கு இந்த கார்டில் சேமிக்கப்பட்டு எதிர்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றது. தொழிலாளர் அட்டை இந்த கார்டு அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கானது. கல்வி உதவி மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை போன்ற பல திட்ட பலன்களை பெற இந்த அட்டை பயன்படுகிறது. இது தொழிலாளர்களுக்கு மிக உதவியாக இருக்கின்றது.
சஞ்சீவினி அட்டை என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு சுகாதார அட்டை. இது உங்களுக்கு ஆன்லைன் ஓபிடி வசதியை கொடுக்கின்றது. இந்த ஒரு பொதுவான நோய்க்கும் ஆன்லைனில் மருத்துவரை அணுகி இ மருத்துவ சீட்டை பெற முடியும். மருத்துவரை சந்திக்க முடியாதவர்களுக்கு இந்த அட்டை மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
அபா கார்டு இது ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் கார்டு சுகாதார பதிவுகளை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. இந்த அட்டையின் மூலம் உங்கள் உடல் நல பதிவுகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் எந்த மருத்துவர் அல்லது மருத்துவமனையிலும் நீங்கள் சிகிச்சை பெரும்போது அதை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.
கோல்டன் கார்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் தங்க அட்டை வழங்கப்படுகின்றது. இந்த அட்டையின் மூலம் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் நாம் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். இதில் மருத்துவரின் கட்டணம் மருத்துவ செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தும் அடங்கும். இ ஷரம் கார்டு, இந்த கார்டு அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
இந்த அட்டை மூலம் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் சமூக பாதுகாப்பு மற்றும் பல அரசு திட்டங்களின் பலன்களை பெறலாம். இது தவிர தொழிலாளர்கள் மற்றும் திறன் பயிற்சிக்கான வாய்ப்புகளையும் இந்த அட்டை மூலம் பெற முடியும். ஆதார் அட்டை, ஆதார் அட்டை என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு முக்கிய ஆவணம்.
இது உங்கள் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகும். இந்த ஆதார் அமைப்பால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான எண் ஆதார் அட்டை இல்லாமல் பல அரசு திட்டங்களின் பலன்களை பெற முடியும். ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைப்பது மொபைல் எண்ணுடன் இணைத்து அரசு பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…