Connect with us

govt update news

பெண்கள் அக்கவுண்ட்க்கு வரும் 10,000 ரூபாய்… இனி இவங்களுக்கு எல்லாம் கிடைக்காது…!

Published

on

இந்த பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த 10,000 ரூபாய் இனி கிடைக்காது என்று மாநில அரசு தெரிவித்து இருக்கின்றது. பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒடிசா மாநில அரசு தொடங்கிய திட்டம் தான் சுபத்ரா யோஜனா திட்டம் . இதில் தகுதி உள்ள பெண்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த பணம் மொத்தம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.

முதலில் 5000 ரூபாய் அதுக்கு அடுத்து சில மாதம் கழித்து 5000 ரூபாய் விடுவிக்கப்படும். இந்த திட்டத்தில் சில முக்கியமான மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன் கீழ் சில பெண்கள் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள பெண்கள் என்ன விதிமுறை மாற்றப்பட்டிருக்கின்றது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒடிசா அரசு இந்த ஆண்டில் சுபத்ரா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்ததது. இந்த திட்டத்தின் நோக்கம் மாநில பெண்களுக்கு நிதி உதவி வழங்குவது. இதில் தகுதியுள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ஆண்டுதோறும் 10000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் அனைத்து பெண்களும் இதனை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுபத்ரா யோஜனா திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அரசு பணியில் இருக்கும் பெண்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற மாட்டார்கள். இது தவிர வருமான வரி செலுத்தும் பெண்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. குறிப்பாக சுபத்ரா யோஜனா திட்டத்திற்கு தகுதியில்லாத பலரும் விண்ணப்பித்திருப்பதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கின்றது.

குறிப்பாக ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கும் மேலிருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கீழ் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு பலன்களை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதில் தகுதியுள்ள ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிருக்கும் 5000 அனுப்பப்படும்.

இது ஆண்டுக்கு 5000 வீதம் இரண்டு தவணைகள் வீதம் இது தவிர பெண்களுக்கு டெபிட் கார்டு வசதிகளும் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்பிலும் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் 100 பெண்களுக்கு கூடுதலாக ரூபாய் 500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

google news