தன்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்த்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான சாட்டை முருகன் செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் மீது புகார் எழுந்தது. கருணாநிதி குறித்து அவர் பாடல் பாடியது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்தநிலையில், சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட திமுக ஐடி விங் பொறுப்பாளர் அருண் என்பவர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாகப் புகார் அளித்தார். இதையடுத்து, சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து, தென்காசியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவரைக் கைது செய்தனர்.
கைது செய்து திருச்சி கொண்டுவரப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. இதையடுத்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பும்படி போலீஸ் கோரியது. ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சாட்டை துரைமுருகனை விடுவித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து விடுதலையான சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், `நான் பாடிய பாடல் என்னுடையது அல்ல. அது அதிமுகவுடையது. என் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன். இந்த அரசு என்னைத் திட்டமிட்டு கொலை செய்யப் பார்த்தது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…