திருடச் சென்ற கடையிலிருந்த ஐஸ்கிரீமை கையோடு களவாடிய சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட டூவிபுரத்தில் பால் மொத்த வியாபாரக் கடை நடத்தி வருகிறார் பெருமாள். தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதியில் இந்தக் கடை அமைந்துள்ளதால் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும்.
இந்நிலையில் எப்போதும் போல இரவு கடையைப் பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். நள்ளிரவு இரண்டு முப்பது மணியளவில் ‘புள்ளிங்கோ’ கெட்-டப்பில் இருக்கும் இளைஞர்கள் இரண்டு பேர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கின்றார்கள். தூத்துக்குடி நகரின் பல கடைகளுகு பால், தயிர், மோர் வகைகளை சப்ளை செய்யும் மொத்த கடை இது என்பதால் கல்லாவில் பணம் அதிகமாக இருக்கும் எனக்கூட எண்ணியிருக்கலாம் திருடச் சென்ற நபர்கள்.
பால் வியாபாரம் என்பதால் தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கடையை திறந்து விடுவாராம் பெருமாள். நள்ளிரவு கடைக்குள் நுழைந்த திருடர்கள் கடையின் கல்லாவிலிருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை கட்டுகளை அங்கிருந்து எடுத்தவர்கள் அதனை தூக்கி எறிந்த காட்சிகள் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
பணத்தை திருடியவர்கள் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கடையில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த கோன் ஐஸ் வகைகளையும் திருடிச் சென்றிருக்கின்றனர். அறுபது ரூபாய் மதிப்பிலான இந்த கோன் ஐஸ் வகைகளில் பத்து முதல் பதினைந்தை கையோடு எடுத்துச் சென்றது சிசிடிவி பதிவில் தெரிந்திருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…