Connect with us

latest news

இந்தாங்க இத செலவுக்கு வச்சிக்குங்க…கஸ்டமராக மாறிய களவாணி…

Published

on

Theft

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் கிராமத்தில் நடந்த களவு முயற்சி சிரிப்பை வரவழைத்துள்ளது. கிராமத்தில் உணவகம் ஒன்றில் தான் இந்த திருட்டு சம்வத்திற்கான முயற்சி நடந்துள்ளது. விற்பனை முடிந்தது எப்போதும் போல ஹோட்டலை மூடிவிட்டு சென்றிருக்கிறார் கடையின் உரிமையாளர்.

கிராமம் என்பதால் இரவு நேரத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது. திருடும் நோக்கத்தில் அங்கே வந்த நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த கம்பியை வைத்து கடையின் பூட்டை திறந்திருக்கிறார். அதன் பின்னர் சுற்றுலா செல்வது போல கடை முழுவதும் ரவுண்டு அடித்துருக்கிறார். சிறிது நேரம் கழித்து தான் வந்த காரியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதால் கடையின் கல்லாவில் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார்.

Thief

Thief

தான் கஷ்டப்பட்டு உழைத்த பணம் இப்படி ஏதாவது வழியில் தொலைந்து போகிவிடக்கூடாது என உஷாராக நினைத்திருந்த கடையின் உரிமையாளர் ஒரு ரூபாயைக் கூட கல்லாவில் வைக்காமல் எடுத்துச் சென்றிருக்கிறார். கடை முழுவதும் காசு, பணம் ஏதாவது தென்படுமா? என்ற ஆவலோடு சமையலறைக்குள் சென்ற முகத்தை மறைத்துக் கொண்டு திருட வந்த திருட்டு ஆசாமி, எங்கும் பணமில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் கடை பிரிட்ஜில் இருந்த கூல்டிரிங்க்ஸை எடுத்து குடித்துள்ளார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது பர்ஸிலிருந்து இருபது ரூபாயை கடை கல்லாப்பெட்டியில் வைத்து விட்டு வெளியேறியிருக்கிறார். சிரிப்பை வரவழைக்கக் கூடிய இந்த திருட்டு முயற்சி கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்திருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வர, இதனைப் பார்த்தவர்கள் தங்கள் சிந்தனைக்கு வந்ததை எல்லாம் கருத்தாக பதிவிட்டு வருகின்றனர்.

google news