govt update news
வருமான வரி கட்டுபவரா நீங்கள்?..Form16 சமர்ப்பிக்கும் பொழுது இதையெல்லாம் மறந்துடாதீங்க..
தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வருமான வரியாக கட்ட வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை இந்த தொகையை திரும்ப பெறுவதற்கு நாம் ஃபார்ம் 16 எனும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் நமது வருமான வரியை நமது அத்தியாவசிய கணாக்கினை காட்டி திரும்ப பெற்று கொள்ளலாம்.
வருமான வரி சட்டம் செக்ஷன் 203, 1961ன் படி எந்தவொரு நிறுவனத்தில் வேலைபார்ப்பவரும் தங்களின் வருமானத்தினை பற்றிய தகவல்களை ஃபார்ம் 16 எனப்படும் ஆவணத்தில் முழிமையாக காண்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த வருடம் ஃபார்ம் 16 ஐ வருகின்ற ஜுலை 31, 2023 தேதியிலிருந்து சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த ஃபார்ம்16ஐ நாம் பூர்த்தி செய்வதால் பல நன்மைகளை பெற முடியும். நாம் குடியிருக்கும் வீட்டிற்கான வாடகை மற்றும் விடுமுறை பயணப்படி என பல சலுகைகளும் உண்டு.
வருமான வரி விவர அறிக்கையை சமர்பிக்கும் பொழுது நினைவில் கொள்ள வேண்டியவை:
- ஃபார்ம் 16 பூர்த்தி செய்யும் பொழுது நமது PAN கார்டினை பற்றிய தகவல்களை கவனமுடன் கொடுக்க வேண்டும். நாம் அதனை தவறாக கொடுத்தால் ஃபார்ம் 26ASல் பான் கார்டு பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போகலாம். இதனால் நாம் வருமான வரியினை பெற இயலாம போகலாம்.
- நமது பெயர், முகவரி, முகவரி, வரிவிலக்கு போன்ற தகவகளை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- நமது வருமானத்தினை பற்றிய தகவல்களை ஃபார்ம்16, ஃபார்ம்26AS, வருடாந்திர தகவல் அறிக்கை என அனைத்திலும் ஒன்றுபோல் உள்ளதா என்பதை நன்கு அறிய வேண்டும். ஏதெனும் தவறு இருந்தால் அதனை ஃபார்ம்16ல் தெரிவிக்க வேண்டும்.
- ஒரு வேளை நாம் வேறு வேலைக்கு சென்றால் நாம் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து ஃபார்ம் 16ஐ பெற்று கொள்ள வேண்டும்.