மக்களவை சபாநாயகர் பெரும்பாலும் ஆளுங்கட்சி நிறுத்துபவரே வெற்றிபெறுவார். இதனால், இந்தப் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவது அபூர்வம்.
சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்பு முடிந்தநிலையில், கடந்தமுறை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவே இந்தமுறையும் சபாநாயகராக ஆளும் பாஜக முன்னிறுத்துகிறது.
அதேநேரம், எட்டுமுறை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கொடிக்குன்னில் சுரேஷை சபாநாயராகத் தேர்வு செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அதனால், இந்தமுறை சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சுதந்திர இந்திய வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கிறது.
இதற்கு முன் நடந்த இரண்டு சபாநாயகர் தேர்தல்களில் என்ன நடந்தது?
1952: ஜி.வி. மால்வங்கர் vs ஷங்கர் சாந்தாராம் மோரே
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகராக குஜராத்தைச் சேர்ந்த மூத்த சுதந்திரப் போராட்ட வீரரான மால்வங்கரை பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பினார். அப்போதைய அமைச்சர்கள் இதை ஆதரித்த நிலையில், சாந்தாரம் மோரேவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரான கண்ணணூர் கோபாலன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து நடந்த தேர்தலில் மால்வங்கர் 394 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மோரேவுக்கு 55 எம்.பிகளின் வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
1976: பிஆர் பகத் vs ஜோஷி
1975 எமெர்ஜென்சியைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஜி.எஸ்.தில்லோன் ராஜினாமா செய்யவே, சபாநாயகர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் எம்.பி பகத்தை பிரதமர் இந்திராகாந்தி முன்னிறுத்தினர். அதேநேரம், எம்.பி ஜோஷியை சபாநாயகராக்கும் தீர்மானத்தை பாவ்நகர் தொகுதி உறுப்பினரும் ஸ்தாபன காங்கிரஸ் உறுப்பினருமான பி.எம்.மேத்தா கொண்டுவந்தார். இதையடுத்து நடந்த தேர்தலில் 344 வாக்குகள் பெற்று பகத் சபாநாயகரானார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…