Connect with us

latest news

கூட்டணியில எந்த சிக்கலும் இல்ல…திருமாவளவன் விளக்கம்..

Published

on

Thirumavalavan Stalin

மது ஒழிப்பு மாநாடு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியிருந்த வீடியோ வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா துணை முதல்வர் பதவி குறித்து பேசியிருந்தது தமிழக அரசியலில் எழுந்த பரபரப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கருத்து தெரிவித்திருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே  இது குறித்து சொல்ல முடியும் என பதிலளித்தார்.

கூட்டணி விசயத்தில் கட்சித்தலைமை தான் முடிவெடுக்கும் அதில் தான் தலையிட மாட்டேன் என ஆதவ் அர்ஜுனா சொல்லியிருப்பதாகவும் திருமாவளவன் சொல்லியிருந்தார்.

Raaza

A.Raaza

திராவிட முன்னேற்றக் கழகத்துடனான விடுதலை சிறுத்தைகளின் கூட்டணியில் எந்தவித சிக்கலும் இப்போது வரை இல்லை என்றும், இனியும் எழாது எனவும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை மட்டுமல்லாது 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டும் கட்சி நலன், மக்கள் நலன் ஆகியவற்றையும் மனதில் கொண்டு தான் கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பின் போது பேசியிருந்தார்.

அதோடு மதுஒழிப்பு மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் மகளரணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும், தமிழ் நாட்டில் முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த கோரியும், தேசிய அளவிலும் இதையே நடைமுறைப்படுத்த கோரியும் தான் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது என்றும் திருமாவளவன் சொல்லியிருக்கிறார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *