மது ஒழிப்பு மாநாடு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியிருந்த வீடியோ வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா துணை முதல்வர் பதவி குறித்து பேசியிருந்தது தமிழக அரசியலில் எழுந்த பரபரப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கருத்து தெரிவித்திருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இது குறித்து சொல்ல முடியும் என பதிலளித்தார்.
கூட்டணி விசயத்தில் கட்சித்தலைமை தான் முடிவெடுக்கும் அதில் தான் தலையிட மாட்டேன் என ஆதவ் அர்ஜுனா சொல்லியிருப்பதாகவும் திருமாவளவன் சொல்லியிருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான விடுதலை சிறுத்தைகளின் கூட்டணியில் எந்தவித சிக்கலும் இப்போது வரை இல்லை என்றும், இனியும் எழாது எனவும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை மட்டுமல்லாது 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டும் கட்சி நலன், மக்கள் நலன் ஆகியவற்றையும் மனதில் கொண்டு தான் கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பின் போது பேசியிருந்தார்.
அதோடு மதுஒழிப்பு மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் மகளரணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும், தமிழ் நாட்டில் முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த கோரியும், தேசிய அளவிலும் இதையே நடைமுறைப்படுத்த கோரியும் தான் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது என்றும் திருமாவளவன் சொல்லியிருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…