அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய காரணம் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தற்போது வைரலாகி இருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு இந்த வருடம் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட இருந்தனர். ஆனால் பிரச்சாரத்தில் ஜோ பைடன் தொடர்ந்து தடுமாறி வந்தார்.
இதனால் அவர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என அவர் கட்சிக்குள்ளையே எதிர்ப்பு குரல் கிளம்பியதை அடுத்து இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்திருந்தார். தன்னுடைய மீதம் இருக்கும் ஆட்சி காலத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய முடிவு குறித்து முக்கிய காரணத்தை நாட்டு மக்களிடம் ஜோ பைடன் பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.
அவர் பேசியதாவது, இளம் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கொடுப்பதே தற்போது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்காகவே நான் இந்த முடிவை முதலில் எடுத்தேன். ஜனநாயகத்தை காப்பதற்காகவே நான் இந்த தேர்தலில் இருந்து விலகினேன். கமலா ஹாரிஷ் அனுபவம் மிக்கவர். திறமைசாலி.
துணை ஜனாதிபதியாக இருந்தபோதே அவருடைய செயல்பாடுகள் வரவேற்பை பெற்றது. தற்போது அவருக்கு நாட்டை வழிநடத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். தன்னுடைய ஆதரவை கமலா ஹாரிஸிற்கு நேரிடையாக தெரிவித்து இருந்தாலும் ஜனநாயக கட்சி சார்பில் இருந்து அடுத்த மாதம் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…