இந்திய அணி உலக கோப்பையை வாங்க காரணமாக இருந்த தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் மீண்டும் தொடராமல் போனதற்கு பின்னர் பல அரசியல் சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 50 ஓவர் உலகக்கோப்பை பைனல் மற்றும் நடப்பு டி20 உலகக்கோப்பை சாம்பியன் என இந்திய அணியை வெற்றியின் பாதையில் நடத்தி சென்றவர் ராகுல் டிராவிட். இருந்தும் இந்திய அணியின் பயிற்சியாளர் இடத்தில் இருந்து விலக இருக்கிறார். இதற்கு அவர் குடும்ப பின்னணி காரணமாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம்.
பாஜக ஆட்சியில் முன்னதாக எம்பியாக இருந்தவர் கௌதம் கம்பீர். கொஞ்சம் கோப முகம் கொண்ட கம்பீர் பாஜகவின் ஆதரவாளர் என்பதால் அவரை கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக கொண்டு வர பணிகள் நடந்து வந்தது. கம்பீரும் இதை விரும்பினார். இதனால் தான் அரசியலில் பிரேக் எடுத்து மீண்டும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார்.
டிராவிட் எப்போதும் ஒரு வீரரை நம்புவார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுப்பார். ஆனால் கம்பீர் அப்படி இல்லை. ஒருமுறை இல்லையென்றால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காது. இதன் காரணமாக அவர் வந்து அனுப்புவதற்கு பதில் தாங்களே சென்றுவிடலாம் என்று தான் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் உடனே ஓய்வை அறிவித்தனர்.
கவுதம் கம்பீரின் இந்த தடாலடியை தான் பிசிசிஐயும் விரும்புகிறது. அதனால் தான் மீண்டும் டிராவிட்டுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கம்பீரை உள்ளே அழைத்து வருகிறது. இதனால் அடுத்து வரும் இந்திய போட்டிகளில் நிறைய மாற்றங்களை காண முடியும் என வல்லுநர்களிடம் பேச்சு எழுந்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…