Connect with us

latest news

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்…அதிகரிக்கும் பதட்டம்?…

Published

on

Armstrong Family

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வைத்து கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெருநகரின் முக்கிய இடத்தில் வைத்து தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாக தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசின் மீது கடுமையான விமர்சனத்தை கிளப்பியது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அரசியல் கட்சிகள் தங்களது குற்றச்சாட்டினையும், விமர்சனங்களையும் முன் வைத்தனர். கொலை சம்பவத்தை தொடர்புடையதாக சிலர் சரணடைந்த நிலையில், விசாரணைக்கு செல்லும் வழியில் போலீஸாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டர் செய்தனர், விசாரணை முடுக்கி விடப்பட்டு போலீஸாரின் வளையத்திற்குள் பலர் கொண்டு வரப்பட்டு அவர்களிடம் கொலை பின்னணி பற்றிய முழு விவரங்களை பெற தீவரமாக முயன்று வருகின்றனர் காவல் துறையினர்.

Armstrong Family and CM

Armstrong Family and CM

வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்து வந்தார். அதோடு இந்த சம்வத்தின் மீது முறையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட அரசு உதவும் என உறுதியும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் குண்டு வீசி கொலை செய்யப்படுவார்கள் என கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்படுள்ள செய்தி மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடக்கூடாது என காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சதீஷ் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

google news