திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிடிஎஃப் வாசன் பிராங் செய்த வீடியோவுக்கு தேவஸ்தானம் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற கோவில்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் ஒன்று. அங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். மணி கணக்கில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மட்டுமல்லாமல் வார நாட்களிலும் இங்கு கூட்டம் அலைமோதி வருகின்றது .
மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று இலவச தரிசனத்திற்காக 32 அறைகளும் நிரம்பி வழிந்தது. 18 மணி நேரத்திற்கு மேலாக நின்று மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தார்கள். இந்நிலையில் சர்ச்சைக்கு பேர் போன டிடிஎஃப் வாசன் திருப்பதிக்கு சென்று இருக்கின்றார்..
அங்கு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ செய்து இருக்கின்றார். அதாவது திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பது போல அவர் பிராங்க் செய்திருக்கின்றார். மேலும் இதனை திருப்பதி ஃபன்னி வீடியோ என்ற பெயரில் வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது. பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்கு பலரும் அவரை திட்டி வருகிறார்கள். இந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் எச்சரித்து இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் எப்படி போனை அவர் உள்ளே எடுத்துச் சென்றார் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…