திருப்பூர் மாவட்டம் ஒட்டபாளையம் கிராமத்தில் இரவு நேரங்களில் கூரை மீது விழும் கற்களால் அப்பகுதி மக்கள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிதான் ஒட்டபாளையம். இந்த கிராமத்தின் மதுரை வீரன் கோயில் அருகே உள்ள காலனியில் இரவு நேரங்களில் வீடுகளின் மீது கற்கள் திடீரென வந்து விழுவதாகச் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
கடந்த 15 நாட்களாக இரவு 7 மணிக்குப் பிறகு இப்படி திடீரென வந்து விழும் கற்களால் பல வீடுகளின் ஓடுகளும் உடைந்து சேதமடைந்திருக்கின்றன. இதுகுறித்து போலீஸில் கிராம மக்கள் புகார் அளிக்கவே போலீஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர ட்ரோன் கேமரா, உள்ளூர் இளைஞர்கள் கிரேன் மீது ஏறி நின்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டும், கற்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால், கற்களை எறிவது மனிதர்கள்தானா… இல்லை குட்டிச்சாத்தானின் வேலையா என அப்பகுதி மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கிறார்கள் ஒட்டபாளையம் கிராம மக்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…