1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி பிறந்தவர் அவூல் பக்கர் ஜெயிலூதீன் அப்துல் கலாம். திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பும், சென்னை பொறியியல் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்து முடித்தவர். இ நதிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார்
ஏவுகனைகள் மற்றும் ஏவுகனைகள் ஏவல் தொழில் நுட்பத்தில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே இவருக்கு இந்தியாவின் ‘ஏவுகனை நாயகன்’ என்ற ஒரு பெயரும் இன்று வரை இருந்துவருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே அதிர்ச்சியடையும் அளவில் போக்ரானில் அணுகுண்டை வெடிக்கச் செய்து உலக அரங்கில் இந்தியாவின் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்தவர்.
இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்பதில் இவருக்கு அலாதி பிரியம் இருந்து வந்தது. 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இவர் இந்திய நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்திருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட லட்சுமி சாகலை வீழ்த்தி ஜனாதிபதியாக மாறியவர்.
இவருக்கு அப்போதைய ஆளும் கட்சியான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வழங்கிய ஆதரவினால் இவர் இந்திய நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ‘மக்களின் சனாதிபதி’ என்றும் அழைக்கப்பட்டார்.
இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர். இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதாமாகவும், அவர்களை சாதனை நாயகர்களாக மாற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் தனது கருத்துக்களை சொல்லி வந்தவர். ‘அக்னி சிறகுகள்’, ‘இந்தியா 2020’ புத்தகங்களை எழுதியவர்.
ஊழல் ஒழிய, இளைஞர்கள் நேர்மையான வழியில் பயணிக்க “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர். 2015ம் ஆண்டு ஜூலை இருபத்தி எழாம் தேதி தனது என்பத்தி மூன்றாவது வயதில் மாரடைப்பினால் காலமானார். இவரது ஒன்பதாவது நினைவு தினமான இன்று பலரும் இவருக்கு தங்களது நினைவு அஞ்சகியை செலுத்தி வருகின்றனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…