Connect with us

latest news

திடீரென குறைந்த தங்க விலை!. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!.. இன்றைய நிலவரம்!..

Published

on

gold

பொதுமக்களில் பலருக்கும் தங்க நகைகளை வாங்கும் ஆர்வம் எப்போதும் இருக்கிறது. பலரும் தங்கத்தை சொத்து போல சேர்த்து வைப்பதும் உண்டு. பணக்காரர்கள் பலரும் வீட்டில் 300 பவுன், 500 பவும் என நகைகளை வைத்திருப்பார்கள். சிலர் வங்கி லாக்கரில் வைத்திருப்பார்கள். குறிப்பாக தங்க நகை அணிவதில் பெண்களுக்கு அதிக ஆர்வம் உண்டு.

இப்படி பலராலும் விரும்பப்படும் தங்க நகையின் விலை சமீபகாலமாக உச்சத்தை தொட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு பவுன் 40 ஆயிரமாக இருந்த தங்கவிலை இப்போது 55 ஆயிரத்தை தொட்டுவிட்டது. ஜூன் மாதம் முதலே தங்கவிலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

நேற்று (24.06.2024)ம் தேதி ஒரு சவரன் தங்கவிலையில் ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று (25.06.2024) விலை குறைந்திருக்கிறது. அதன்படி இன்று கிராமுக்கு 20 குறைந்த விலை ஒரு கிராம் 6,680க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் 53,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து இன்று ஒரு கிராம் 5472 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து 43,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் 95.50க்கும் ஒரு கிலோ வெள்ளி 95,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

google news