latest news
மோடிக்கு கோவில்… பூஜை, புனஸ்காரங்களுடன் வழிபாடு செய்யும் விவசாயி… இதுல நேர்த்திக்கடன் வேற இருக்கா?…
திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி அதற்கு தினமும் பூஜை செய்து வருகின்றார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிராமத்தை சேர்ந்து விவசாயி சங்கர். துபாயில் வேலை பார்த்து வந்த இவர் சொந்த ஊர் திரும்பிய பிறகு விவசாயம் மீது இருந்த ஆர்வம் காரணமாக விவசாயம் செய்ய தொடங்கினார். மேலும் பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் அந்த திட்டத்தால் பயணம் அடைந்திருக்கின்றார். இதனால் பிரதமர் மோடி மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டது.
அதன் காரணமாக கோவில் கட்டத்திட்டமிட்ட இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் மோடிக்கு சிலை அமைத்து கோவில் எழுப்பினர். 1.25 லட்சம் செலவு செய்து 6 மாதங்களாக இந்த கோயிலை கட்டி இருக்கின்றார். தான் கட்டி இருக்கும் கோயிலில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை அமைத்திருக்கின்றார். மேலும் பிரதமர் மோடியின் சிலையுடன் சாமி படங்கள் மற்றும் காமராஜர் எம்ஜிஆர், ஜெயலலிதா, மோடி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் புகைப்படங்களையும் இணைத்து வைத்திருக்கின்றார்.
விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்ததால் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். மேலும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று வேண்டுதல் வைத்துள்ளாராம். அந்த வேண்டுதல் நிறைவேறியதால் மோடிக்காக கட்டிய கோயிலில் சிறப்பு பூஜையும் செய்து இருக்கின்றார். மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது “மோடி மீது இருந்த அன்பு காரணமாக கோவில் கட்டியுள்ளேன்.
தேங்காய், மாங்காய், மரவள்ளி போன்ற விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கின்றது. அதனால் மோடியை நினைத்து தினமும் பூஜை செய்து வருகின்றேன். மேலும் அவர் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன். அது நிறைவேறியதால் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடனை செலுத்த உள்ளேன்.
இது தவிர என் வயலில் விளைந்த பத்து மூட்டை நெல் மற்றும் கிடாவெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்ய இருக்கின்றேன். பிரதமர் மோடியின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு பிறகும் இந்த கோவில் இருக்க நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோயிலுக்காக எழுதி பத்திரம் போட்டு வைத்திருக்கின்றேன்” என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.