Connect with us

latest news

அண்ணாமலையை அட்டாக் செய்த சூர்யா…மிரட்டி பணம் வசூலிக்கலேன்னு சொன்னா லிஸ்ட் தருவதாக சவால்!…

Published

on

Annamalai Trichy Surya

சென்னையில் கார் பந்தயம் நடத்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டிலுள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அன்மையில் தனது எக்ஸ் பக்க பதிவின் மூலமாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதோடு ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து தனது ஹிந்தி கூட்டணி கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில் திமுக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது எனவும் தனது கடுமையான குற்றச்சாட்டினையும் முன்வைத்திருந்தார்.

Annamalai

Annamalai

கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து,கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுகவினர் இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயர்த்திற்கு சென்று விட்டனர் எனவும் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டுப்பிரிவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் அலீஷா அப்துல்லா தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை அன்மையில் சந்தித்திருந்தார்.

Dr. Alisha Abdullah

Dr. Alisha Abdullah

இந்த சூழலில் அண்ணாமலையின் பதிவிற்கு பாஜகவின் முன்னாள் நிர்வாகியும், அக்கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட  திருச்சி சூர்யா பதிலளித்துள்ளார்.

தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க தமிழ் மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என கூறும் அண்ணாமலை, மோடி கபடி லீக் என்ற பெயரில் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி செய்த ஊழல், முறைகேடுகள் பொது நல ஆசைகளுக்காக செய்யப்பட்டதா? என அமர் பிரசாத் ரெட்டி மீது கை நீட்டி எடுத்த நடவடிக்கைகள் என்ன என சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சியினரால் மிரட்டப்பட்ட தொழிலதிபர்கள் லிஸ்ட் வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் திருச்சி சூர்யா. இந்திய அளவில் அமலாக்கத்துறையை ஏவி, பின்னர் தேர்தல் பத்திரத்திற்கு பணம் வசூலிக்கப்பட்ட கதை தான் ஊரே நாறியது, குற்றம் சாட்டுவதை விட தொழில் அதிபர்களை மிரட்டி பணம் வாங்குவதை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இருக்கிறதா? என கடுமையாக சாடியிருக்கிறார் திருச்சி சூர்யா.

google news