latest news
இரட்டை வேடம் போடும் திமுக…ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவிற்கு டிடிவி தினகரன் ஆதரவு?…
செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேறக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு யூகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என சொல்லியிருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கு தன்னை அழைக்கவில்லை என டிடிவி தினகரன் சொன்னார். அழைப்பு விடுக்கப்பட்டால் பங்கேற்பீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு யூகங்களுக்கு எல்லாம் தன்னால் பதில் சொல்ல முடியாது என கூறினார்.
அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்த பேச்சாளர் மகாவிஷ்ணுவை அழைத்தது தவறு, உலகப் பொதுமறையான திருக்குறளில் கூட முன் ஜென்மம் குறித்து இருப்பதாகவும், டிடிவி தினகரன் சொன்னார்.
முருகன் மாநாடு நடத்திய திமுக அரசு, மகாவிஷ்ணு விஷயத்தை பிற்போக்குத் தனம் என குறிப்பிடுவதான செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தினகரன், திமுக இரட்டை வேடம் போடும் கட்சி என குற்றம் சாட்டினார்.
இந்த விஷயத்தில் மகாவிஷ்ணுவை கைது செய்தது தவறு என்றும், இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் பதிலளித்தார். மகாவிஷ்ணுவை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்க வேண்டும், அதை விட்டு விட்டு கைது நடவடிக்கை வரை சென்றது தவறு எனக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகளை இழிவாகப் பேசியது கண்டனத்திற்குரியது என்றார் டிடிவி தினகரன்.உதயாநிதி ஸ்டாலின் குறித்த கேள்வியை எழுப்பிய செய்தியாளருக்கு பதிலாக அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என சொன்னார் தினகரன்.