தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் 10வது மற்றும் 12வது வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விஜய் பரிசு கொடுக்கும் விழா இன்று திருவான்மியூரில் தொடங்கி இருக்கிறது.
நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சியை அறிவித்த பின்னர் இதுவரை விஜய் தரப்பில் இருந்து மாநாடுகள் எதுவும் நடத்தப்படவில்லை. முதல்முறையாக அரசியல் தலைவராக ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டிருக்கிறார்.
இவ்விழாவில் 234 தொகுதிகளை சேர்ந்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து புஸ்ஸி ஆனந்த் வரவேற்று இருக்கைகளில் அமர வைத்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்திரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மலாய் சான்விச், இஞ்சி துவையல், அவரை மணிலா பொரியல், உருளை காரக்கறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் என வழங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து 800க்கும் அதிகமான மாணவர்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். அரசியல் தலைவராக விழாவில் கலந்துக்கொள்ளும் முதல் விழா என்பதால் இது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இவ்விழாவில் பேசிய விஜய், என் தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துக்கள். என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை குறிப்பு… மாநிலம் முழுவதும் கிளம்பும் எதிர்ப்பு…
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…