பொதுவாக திருமணமான கணவர்கள் இன்னொரு பெண்ணை பார்த்தாலே கோபமாகி காளியாகும் பெண்கள் மத்தியில் இப்படியும் சில பெண்களா என ஆச்சரியப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
ஆந்திரா மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தினை பெடபெயலு அருகே உள்ள கிராமத்தினை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சாகேனி பர்வதம்மாவுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் இத்தம்பதிக்கு குழந்தை பிறக்கவே இல்லை.
குழந்தை ஆசையால் இன்னொரு திருமணம் செய்ய இருப்பதாக சாகேனியிடம் பாண்டண்ணா கூற அவரும் முழு மனதுடன் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2005ம் ஆண்டு பாண்டண்ணாவுக்கும், சாகேனி அப்பளம்மா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு இரண்டு வருடம் கழித்து 2007ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இரண்டு மனைவி மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் தான் பாண்டண்ணா வசித்து வந்தார். இவருக்கு திடீரென இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்தது. ஆனால் அவர் முதல் இரண்டு மனைவிகளால் குழந்தை பெற்றுகொடுக்க முடியாமல் இருந்தது. உடனே இன்னொரு பெண்ணை கணவருக்கு பார்த்துள்ளனர்.
வெகு விமரிசையாக பேனர் அடித்து கணவருக்கு மூன்றாவது திருமணத்தினை இரண்டு மனைவிகள் முன்னின்று நடத்தி வைத்து இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதை பார்க்கும் பலர் ஆச்சரியமடைந்து இருக்கின்றனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…