latest news
கல், மண், சிமெண்ட்டை சாப்பிடும் பெண்… கண்டுப்பிடித்த கணவருக்கு காத்திருந்த ஷாக்…
பொதுவாகவே சிலருக்கு அரிதான ஒரு பழக்கம் இருக்கும். விபூதி, சாம்பல், சிலேட் குச்சி போன்றவற்றை பலர் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதை விட ஒருபடி அதிகமாக போய் ஒரு பெண் கல், மண், சிமெண்ட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த 39 வயதான பெண் பேட்ரிஸ் பெஞ்சமின். இவர் தன் பள்ளிபருவ நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் கொண்டு இருக்கிறார். பேட்ரிஸுக்கு 18 வயதில் இருந்தே கல், மண் மற்றும் சிமெண்ட்டை சாப்பிடும் வழக்கத்தினை வைத்து இருக்கிறார். சிலருக்கு ஸ்வீட் சாப்பிட பிடிக்கும், சிலருக்கு புளிப்பானதை சாப்பிட பிடிக்கும்.
ஆனால் பேட்ரிஸுக்கு உணவில்லாத பொருட்களை சாப்பிடும் ஆசை அதிகமாம். மேலும், விசாரிக்கையில் பேட்ரிஸ் சுவற்றை உடைத்து அதிலிருக்கும் பொருட்களை திண்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். பேட்ரிஸ் கணவருக்கு முதலில் இந்த விநோத பழக்கம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்து இருக்கிறார்.
பின்னர் இதையறிந்த அவர், அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஆரோக்கியத்தினை கெடுக்கும் என நினைத்தாலும் பேட்ரிஸால் அதை விட முடியவில்லை. தொடர்ச்சியாக செங்கல், மண், சிமெண்ட் ஆகியவற்றை சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
இதையடுத்து, அவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்று விசாரித்த போது இந்த அரிதான பழக்கத்திற்கு பிகா நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நோய் இருப்பவர்களுக்கு சாப்பிட கூடாத பொருட்களை சாப்பிடும் எண்ணம் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது பேட்ரிஸ் சிகிச்சையில் இருப்பதாகவும், இருந்தும் அவரின் இந்த பழக்கம் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: மதுபிரியரின் அட்ராசிட்டி… கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலம்… மீட்க சென்ற காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….