Connect with us

latest news

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை… எப்படி அதை பெறுவது…? வெளியான அறிவிப்பு…!

Published

on

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ரூபாய் 1000 உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசு ஓய்வூதியம், மகளிருக்கான மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், மாணவ மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய், தமிழ் புதல்வன், தமிழ் புதல்வி திட்டத்தின் கீழ் உதவி தொகை, நான் முதல்வன் உள்ளிட்ட  பல்வேறு உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு ஒரு உதவி தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் இந்த உதவி தொகையை பெற முடியும் என்று தெரிவித்துள்ளது. 200 முதல் 1000 ரூபாய் வரை இந்த உதவி தொகை வழங்கப்படும் எடுத்து தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும் வழங்கப்படுகின்றது.

மேலும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தொகை ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மொத்தமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தால் அவர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் முடிவு பெற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news