Connect with us

latest news

ஜூலை 15 கடைசி நாள்… விண்ணப்பிக்காதவங்க உடனே விண்ணப்பிங்க… ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

Published

on

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. இதனால் இந்த ஆண்டுக்கான விருதுக்கு வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2024க்கு தகுதியாக இருக்கும் ஆசிரியர்களிடமிருந்து சுய பரிந்துரைகள் ஜூன் 17ஆம் தேதி முதல் கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் http://nationalawardstoteachers.education.gov.in வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் பரிந்துரைகளை பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 15.

இந்த வருடம் மாவட்ட மாநில அளவில், தேசிய அளவில், மாவட்ட அளவில் என மூன்று தேர்வு செயல்முறை மூலம் 50 நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆசிரியர்களுக்கு வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி புதுடெல்லியில் விஞ்ஞான்தவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படும். ஆசிரியர்கள் தங்களது அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் மூலமாக பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமில்லாமல் வானவர்களின் வாழ்க்கையை சரியாக சீர்படுத்திய ஆசிரியர்களை கௌரவிப்பது தேசிய நல்லாசிரியர் விருதின் நோக்கம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மத்திய அரசு பள்ளிகள் அதாவது கேந்திர வித்யாலயா பள்ளி, ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள், பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் சைனிக் பள்ளிகள், பழங்குடியினர் விவாகர அமைச்சகத்தால் நடத்தப்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகள், சிபிஎஸ்சி மற்றும் சிஐஎஸ்சிஇ ஆகியவற்றுடன் இணைந்த பள்ளிகளில் பணிபுரிபவர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

google news