Connect with us

latest news

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்!.. இதான் காரணமா?

Published

on

தற்போதைய அதிபரான ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இதனால் அடுத்த ஜனநாயக கட்சியின் அதிபர் போட்டியாளர் யாராக இருக்கும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

அமெரிக்க அதிபராக இருப்பவர் ஜோ பைடன். இவர் தான் அடுத்து வர இருக்கும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருப்பார் என நம்பப்பட்டது. ஆனால் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து ஜோ பைடன் தடுமாற்றத்துடனே இருந்தார். முதல் நேரடி விவாதத்தில் கூட டோனால்ட் டிரம்பை அவரால் சமாளிக்க முடியவில்லை.

இது ஜனநாயக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில், அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்  கடந்த மூன்றரை வருடமாக நாடு நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது.

அமெரிக்கா பல இடங்களில் முன்னேறி இருக்கிறது. தற்போது நாடு பெரிய முன்னேற்றத்தினை அடைந்து இந்த இடத்தில் இருக்கிறது. எனக்கு தெரியும், உங்களால் மட்டுமே இது சாத்தியமானது. நாம் அனைவரும் பேரிடரை தாண்டினோம். மோசமான நிதி நெருக்கடியை சரி செய்து இருக்கிறோம்.

 உங்களுடைய அமெரிக்க அதிபராக நான் இருந்தது என்னுடைய வாழ்வில் பெரிய பெருமை. தற்போது நான் மறுதேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் என்னுடைய ஜனநாயக கட்சி மற்றும் மக்களுக்கு நான் செய்ய வேண்டியது நான் தேர்தலில் விலகுவது தான். என்னுடைய ஆட்சியின் மீதி நாட்களை கவனம் செலுத்த இருக்கிறேன்.

இந்த முடிவு குறித்து இந்த வார இறுதியில் பேசுகிறேன். தற்போது நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட எனக்காக உழைத்தவர்களுக்கு நன்றி. என்னுடைய துணை ஜனாதிபதியான கமலா ஹரிஷுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

தற்போது ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா போட்டியில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான போட்டியாளர் இல்லை என்றால் இந்த முறை டொனால்ட் டிரம்பே வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

google news