Connect with us

latest news

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க… சில அரசியல் கட்சிகள் சதி செய்றாங்க – திருமாவளவன்…!

Published

on

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்து வருகின்றனர் என்று திருமாவளவன் கூறியிருக்கின்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்தார். அவர் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறும் போது “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுத்து பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்று சில கட்சிகள் சதி செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க அரசியல் கட்சிகள் செய்யும் சதி தான் இது. பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அரசியல் சதி இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.

ஆம்ஸ்ட்ராங் பலியான சில நிமிடங்களிலேயே பாஜகவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார். எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் விசாரணை செய்யக்கூடாது என்று தெரிவித்தது ஏன்? ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளவர்கள் தான். ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகின்றது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மறைப்பதற்கு இதுபோன்ற நாடகமாடி வருகின்றது. பாஜக புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள ஆணையம் அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்” என்று கூறியிருக்கின்றார்.

google news