கோயம்பேடு மொத்த விலை காய்கறி மார்க்கெட்டில் இன்று பூண்டு, முருங்கைக்காய், பாகற்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், பீட்ரூட் மற்றும் இஞ்சியின் விலை அதிகரித்து காணப்பட்டது.
மார்க்கெட்டில் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகையில், ஜூன்7ல் ஒரு கிலோ பூண்டு 350 ரூபாயிற்கு விற்கப்பட்டு வந்தது. அடுத்ததாக, ஜூன் 14 முதல் நேற்று வரை கிலோ 320 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு இன்று ஒரு கிலோ ரூ.20 குறைந்து ரூ.300 ஆக உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஜூன் 16ம் தேதி முதல் 19 தேதி வரை ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூபாய் 90ல் இருந்து 150 ரூபாயிற்கு உயர்ந்து இருக்கிறது. நேற்று 190 ரூபாயாக இருந்த விலை இன்று 10 ரூ குறைந்து 180 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது.
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து இருக்கிறது. அதேநேரத்தில், முகூர்த்த நாட்களும் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் காய்கறி தேவை அதிகமாகி விலையும் எக்கசக்கமாக உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் தசமடித்த தக்காளி விலை மீண்டும் உச்சம் அடைந்து 70 ரூபாயிற்கு விற்கப்பட்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…