தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என அரசியலின் ஆளுமைகள் கோலிவுட்டிலிருந்து வந்தவர்களே. இவர்களுக்கு அடுத்த படியாக இயக்குனரும், நடிகருமான சீமான், மன்சூர் அலிகான் ஆகியோர் தீவிர அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.
உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மையம்’ என்ற கட்சியை துவங்கி தேர்தலில் களம் கண்டார். தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் உச்சபட்ச நடிகராக இருந்து வருபவர் விஜய்.வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த “தி கோட்” படம் கடந்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அப்படத்தினுடைய படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் விஜய்.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கியுள்ளார். தொடர்ந்து தனது கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தி கொடிப்பாடலையும் வெளியிட்டார். விஜய் கட்சியின் முதல் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டிற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் விஜய்.
அதில் அரசியலில் வேகமாக இருப்பதை விட விவேகமாக தான் முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு தவெகவின் மாநாடு பதிலளிக்கும் என தெரிவித்துள்ள விஜய். அரசியலில் எதாத்தமாக இருப்பதை விட எச்சரிக்கைய்யுடன் களமாட வேண்டும் என்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கு இயக்கமாக தவெக மாறிவிட்டதாகவும் விஜய் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
மாநாட்டிற்கான கால்கோள் விழா மட்டுமல்ல இது அரசியல் பணிகளுக்கான கால்கோள் விழா என்றும், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டிற்கு உண்ர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளை தொடர வேண்டும் எனவும், வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.
அறிக்கையில் “தோழர்களே” என அறிக்கையில் விஜய் குறிப்பிட்டிருப்பது விஜய் கட்சியின் கொள்கை மீதான அதிக எதிர்பார்ப்பை கொடுக்கும் வார்த்தையாக அமைந்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…