latest news
பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை…முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி…
பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் பெரியாருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவியும், மாலை அணிவித்தும் தனது மரியாதையை செலுத்தினார். பகுத்தறிவு பகலவனுக்கு புரட்சி வணக்கம் என முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியில் தெரிவித்துள்ளார்.
புறட்டு கதைகளுக்கு – வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள், எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர் நடைபோட வைத்த பகுத்தறிவு பகலவனுக்கு புரட்சி வணக்கம் என்றும், இன்று உலகம் முழுவது தமிழர் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு தந்தை பெரியாரின் சிந்தனையும், உழைப்புமே அடித்தளம் எனவும்,
ஆயிராமாண்டு மடமையை பொசுக்கிய அவரது அறிவுத்தீதான் நமது பாதைக்கான வெளிச்சம், அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்த நிறுவுவதே நமது தலையாய பணி என தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவியும், மாலை அணிவித்தும் தனது மரியாதையை செலுத்தினார்.
கட்சி துவங்கிய பின்னர் முதல் முறையாக பெரியாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மரியாதை செலுத்த வந்த போது பூக்கள் அடங்கிய தட்டினையும், மாலையையும் தனது கைகளிலேயே ஏந்திய படி வந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தினார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாசும் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.