Categories: latest newstamilnadu

களைகட்டும் விக்கிரவாண்டி தேர்தல் களம்… இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி , கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்ததை அடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என 64 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் பல்வேறு காரணங்களால் 35 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும். மாலை 4 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். அதன்பிறகு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

இதையும் படிங்க: இதுல ஒரு ரகசியமும் இல்ல…. 12வது குழந்தையை வரவேற்கும் எலான் மாஸ்க்

AKHILAN

Recent Posts

ஐந்து நாட்களுக்கு கன மழை?…அலெர்ட் சொன்ன ஆய்வு மையம்…

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

11 mins ago

வாஷ்-அவுட் தானா ப்ளான்?…அட்டாக் மூடில் இந்திய அணி…

இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு,…

59 mins ago

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி…அக்டோபர் நான்காம் தேதி ஆஜராக உத்தரவு…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர்…

2 hours ago

பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…

6 hours ago

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…

7 hours ago

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…

7 hours ago