latest news
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… தபால் எண்ணிக்கையில் முன்னிலையில் திமுக… தேர்தல் அப்டேட்…!
விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக முன்னிலை வகுக்கின்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த பத்தாம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தல் களத்தில் போட்டியிட்டார்கள், மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் வாக்களித்தனர் 82.47 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருக்கின்றது,
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இன்று அதிகாலை ஆறு மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான பணிகள் தொடங்கியது.
காலை 7:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகுத்து வருகின்றார்.