சமீபத்தில் ப்ரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றிற்கு முன்னேறினார். ஆனால் இறுதிப்போட்டி நடைபெற இருந்த அன்று திடீரென வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் இந்திய ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போட்டியில் பங்கேற்க வேண்டிய தினத்தன்று வினேஷ் போகத் ஐம்பது கிலோவை விட நூறு கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
அவருடன் சக மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சூழலில் அரியனாவில் நடைபெற சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.
அதில் ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸில் இணைவதற்கு முன்பாக இந்திய ரெயில்வேவில் தான் வகித்துவந்த பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்.
இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதும் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்தது. வினேஷ் போகத்துடன் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்ட பஜ்ரங் புனியாவிற்கு விவசாய பிரிவு செயல் தலைவர் பதவியை வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…