கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே இளநீரை திருடி குடித்த கும்பல் இது 128வது இளநீர் திருட்டு என்றும், தீர விசாரிக்காதீங்க. அவ்வாறு செய்தால் வேட்டை தொடரும் என போஸ்டர் ஒட்டி இருப்பது அப்பகுதியில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இருக்கும் எஸ்.குளத்தூர் கிராமத்தினை சேர்ந்த சின்னையன் மகன் குமரவேல். இவருக்கு அதே கிராமத்தில் ஐந்து ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதில், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களை வளர்த்து வந்து இருக்கிறார்.
இவர் வெளியூருக்கு சென்று வந்த நேரத்தில் தென்னை மரத்தில் இருந்து இளநீர்கள் காணாமல் போய் இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கலாம் என சென்றவருக்கு அருகில் இருந்த புளியமரம் மேலும் அதிர்ச்சியை கொடுத்ததாம். அதில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
ப்ளூ சார்ட்டில் பெரிய நாமம் போடப்பட்டு 128வது இளநீர் வேட்டை எனக் குறிப்பிடப்பட்டு தீர விசாரிக்காதீர்கள். இதுவே இறுதியாகட்டும். மீறி விசாரித்தால் எங்களின் வேட்டை தொடரும். இப்படிக்கு ஓம் சக்தி ஆதிபராசக்தி, ஸோசோத்திரம் ஆண்டவரே லு.கா 82வது அதிகாரம், எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா என எழுதி இருக்கின்றனர்.
எங்களை கண்டுப்பிடிக்க முடியாது என எச்சரிக்கை விடுத்து செவ்விளனி வளர்க்கவும் என கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். இந்த விஷயம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது. 127 முறை திருடியவர்கள் இந்த முறை இந்த போஸ்டர் எதற்காக என்றும் கேள்வி எழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…