Categories: Cricketlatest news

500-வது போட்டியில் சதம்.. கோலிக்காக ஹார்டின் விட்ட அனுஷ்கா.. வைரலாகும் கியூட் ஸ்டேட்டஸ்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20 ஆம் தேதி துவங்கியது. இது இரு அணிகள் மோதம் 100-வது போட்டி ஆகும். இதோடு விராட் கோலி இந்திய அணிக்காக களமிறங்கும் 500 ஆவது போட்டி ஆகும். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை குவித்து இருந்தது.

500-வது போட்டியில் விளையாடிய விராட் கோலி 87 ரன்களுடன் களத்தில் இருந்தார். இவருடன் ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேற்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி 206 பந்துகளை எதிர்கொண்டு 121 ரன்களை குவித்தார்.

Anushka-Story

இதன் மூலம் விராட் கோலி தனது 76 ஆவது சதத்தை விளாசினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரின் 29 ஆவது சதம் ஆகும். இதோடு ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி 159 ரன்களை சேர்த்தது. ரவீந்திர ஜடேஜா 152 பந்துகளில் 61 ரன்களை குவித்து அசத்தினார்.

விராட் கோலி சதத்தை கொண்டாடும் வகையில் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டார். இந்த பதிவில் கோலி சதம் அடிக்கும் போது டிவியில் எடுத்த அவரது புகைப்படம் அதன் மேல் ஹார்டின் எமோஜி இடம்பெற்று இருந்தது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Virat-and-Jadeja

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து களமிறங்கிய ரவிசந்திரன் அஷ்வின் 56 ரன்களை விளாசினார். இவருடன் ஆடிய இஷான் கிஷன் 25 ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் விராட் கோலி ஆதிக்கம் தொடர்ந்தது.

87 ரன்களில் இருந்து நேற்றைய ஆட்டத்தை தொடங்கிய விராட் கோலி அரை மணி நேரத்தில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியாக 2018 ஆண்டு பெர்த்-இல் இவர் அடித்ததே சர்வதேச மண்ணில் இவர் அடித்த கடைசி சதமாக இருந்தது.

admin

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

50 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago