இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி இந்திய அணி சேப்பாக்கம் மைதனத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டது. பயிற்சியின் போது இந்திய வீரர் விராட் கோலி நெட்சில் பேட்டிங் செய்தார். உள்ளூர் வீரர்கள் பந்துவீச விராட் கோலி பந்துகளை செம டைமிங்கில் விளாசினார். அப்போது விராட் கோலி ஓங்கி அடித்த பந்து சேப்பாக்கம் மைாதான சுவரில் பட்டது. அடுத்த சில நொடிகளில் சுவரில் ஓட்டை விழுந்தது.
விராட் கோலி அடித்த பந்து சுவரில் பதம் பார்த்த சம்பவம் அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி அதன்பிறகு தற்போது நடைபெற உள்ள வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் களமிறங்க உள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்கி இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் இரு போட்டிகள் வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
அதன்பிறகு, இந்த ஆண்டு நவம்பர் மற்றும் ஜனவரி 2025 வரையிலான காலக்கட்டம் வரையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் தொடராக இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…