Connect with us

Cricket

உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..

Published

on

சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி மீண்டும் ஒரு சாதனையை செய்து இருக்கிறார். ஆனால் இந்த முறை சாதனை கிரிக்கெட்டில் இல்லை என்பது தான் ஆச்சரியமே. ஐசிசி உலக கோப்பை வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக மாறி இருக்கிறது.

இந்திய அணி வீரர்கள் இணைந்து கோப்பையை கொண்டாடும் தருணத்தின் புகைப்படத்தினை வெளியிட்டு எமோஷனலாக ரைட்டப் எழுதி இருந்தார் விராட் கோலி. அந்த போஸ்ட் தற்போது இந்த பதிவை எழுதும் வரை 19 மில்லியன் லைக்குகளை பெற்று உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த பதிவில் விராட் கோலி, இதை விட ஒரு ஆச்சரிய நாள் குறித்து கனவு காண முடியாது. என் நன்றியால் தலைவணங்குகிறேன். கடைசியில் சாதித்துவிட்டோம். ஜெய் ஹிந்த் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்னர் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை வாங்கிய புகைப்படம் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் கல்யாண புகைப்படம் தான். அந்த புகைப்படத்தின் சாதனையை விராட் கோலி முறியடித்து இருக்கிறார்.

விராட் புகைப்படத்தில் இண்டர்சேஷனல் ஸ்போர்ட்ஸ் வீரர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.  ஐசிசி டி20 உலக கோப்பையை வாங்கிய கையோடு தன்னுடைய ஓய்வை அறிவித்தார் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி.. பி.சி.சி.ஐ. அதிரடி

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி… உற்சாக வரவேற்பு…!

Published

on

கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-ல் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளது.

சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக இந்திய திரும்ப முடியாமல் பார்படாசியில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் நேற்று இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக பார்படாசிலிருந்து இந்தியா புறப்பட்டனர் . இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லிக்கு வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தின் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

மேலும் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பி இருக்கும் இந்திய அணி வீரர்களை இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி சந்திக்க இருக்கின்றார். இதைத்தொடர்ந்து இன்று மாலை மும்பை வான்கடா மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக உலக கோப்பையுடன் வலம் வருவார்கள் என்றும், ரசிகர்கள் படை சூழ திறந்தவெளி பஸ்ஸில் டி20 உலக கோப்பையுடன் பயணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Continue Reading

Cricket

அந்த ஏழு நொடிகளை மறக்கவே மாட்டேன்.. சூப்பர் கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவ்

Published

on

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகவும், போட்டியை மாற்றி அமைத்த தருணமாகவும் அமைந்தது, சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டில் பிடித்த கேட்ச் என்று கூறலாம்.

இந்த கேட்ச் போட்டியின் நிலைமையை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. இதன் காரணமாக இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. போட்டிக்கு பிறகு, இந்த கேட்ச் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் பிடித்த கேட்ச் குறித்து சூர்யகுமார் யாதவ் மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது, போட்டியின் அந்த சூழலில் நான் ஓட துவங்கும் போது கேட்ச் பிடிக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. என் முழு பலத்தையும் கால்களுக்கு செலுத்தி, முடிந்தவரை பவுண்டரியை தடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதன்பிறகு, பந்தை களத்திற்குள் தள்ளிவிட்டு, அணிக்காக இரண்டு, மூன்று ரன்களை சேமிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

பந்தை அடையும் போது, அது என் கைகளுக்கு வந்துவிட்டது. அப்போது அதனை கேட்ச் ஆக மாற்றி, பந்தை மீண்டும் களத்திற்குள் வீச முடிவு செய்தேன். பிறகு களத்திற்கு வெளியே சென்று, மீண்டும் உள்ளே வந்து கேட்ச்-ஐ முடிக்க முடியும் என்று நம்பினேன்.

இந்த முடிவை எடுப்பதற்கு எனக்கு 5 முதல் 7 நொடிகள் வரை நேரம் இருந்தது. இந்த 7 நொடிகளை என் வாழ்நாள் முழுக்க நான் மறக்கவே மாட்டேன். நான் அப்போது எடுத்த முடிவு எங்களுக்கு சாதகமாக மாறியது, என்று தெரிவித்தார்.

Continue Reading

Cricket

ஜூலை 4, மாலை 5 மணி.. எல்லாரும் வாங்க.. ஒன்றாக கொண்டாடுவோம்.. ரோகித் சர்மா

Published

on

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் ரோடுஷோவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக மும்பையில் பிரத்யேக பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பேரணியில் இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தின் மூலம் நகரில் வலம் வருவர்.

முன்னதாக நாளை அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடையும் இந்திய வீரர்கள் அங்கேயே தங்கி இருந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். சந்திப்பின் போது பிரதமர் மோடி இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் குழுவை பாராட்டுகிறார். பிறகு இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் பிரதமர் மோடியுடன் காலை உணவில் கலந்து கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து பிரத்யேக சார்டர் விமானம் மூலம் இந்திய வீரர்கள் மும்பைக்கு வரவுள்ளனர். பிறகு, இந்திய வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானத்திற்கு செல்கின்றனர். இதையொட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த சிறப்பான தருணத்தை உங்கள் அனைவருடன் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம். இதனால் ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெரைன் டிரைவ் மற்றும் வான்கடேவில் வெற்றி பேரணியை கொண்டாடுவோம். உலகக் கோப்பை வீட்டிற்கு வருகிறது, என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டி20 உலகக் கோப்பை வெற்றி பேரணியில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் பேரணியில் எங்களுடன் இணையுங்கள். ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்திற்கு வருகை தந்து எங்களுடன் கொண்டாடுங்கள். இந்த தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், என்று குறிப்பிட்டிருந்தார்.

Continue Reading

Cricket

உலகக் கோப்பையுடன் நாடு திரும்பும் இந்திய அணி – மோடியுடன் சந்திப்பு, ரோடுஷோ.. களைகட்டப்போகும் கொண்டாட்டம்

Published

on

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பார்படோஸில் இருந்து புறப்பட்டுள்ளது. சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்கள் நாளை காலை டெல்லி விமான நிலையம் வரவுள்ளனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியினர் தாயகம் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். எனினும், பார்படோஸில் ஏற்பட்டு இருந்த புயல் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் குழு மற்றும் இந்திய ஊடகத்தினர் அடங்கிய குழு பார்படோஸில் இருந்து இந்தியா வருகிறது. இதற்காக ஏர் இந்தியாவின் விசேஷ சார்டர் விமானம் AIC24WC (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) விமானம் அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டது.

இந்த விமானம் நாளை (வியாழன் கிழமை) காலை 6.20 மணி அளவில் டெல்லியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தரையிறங்கியதும், இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு நாளை காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்திய அணியை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து சார்டர் விமானம் மூலம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு மும்பை வரவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்திற்கு செல்லும் இந்திய அணியினர் அங்கிருந்து திறந்தவெளி பேருந்து மூலம் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன பேரணி செல்வர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் வைத்து மற்றொரு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் வழங்க உள்ளார். இதன் பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டி20 உலகக் கோப்பை பிசிசிஐ தலைமையகத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.

Continue Reading

Cricket

என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…

Published

on

By

கடந்த ஐபிஎல் தொடக்கத்தில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு வாங்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா. ஆனால் அவரை அணி நிர்வாகம் கேப்டனாக அறிவிக்க ரோஹித் ரசிகர்கள் கொதிதெழுந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸுக்கு மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா மீதும் துவேசங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

இந்த நெகட்டிவிட்டியுடன் தான் ஹர்திக் பாண்டியா உலக கோப்பையில் களமிறங்கினார். எதையும் கணக்கில் கொள்ளாமல் தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காக அமைந்தார்.

இதையடுத்து, ஹார்திக் பாண்டியா டி20 ஆல் ரவுண்டர் ரேங்கிங்கில் இரண்டு இடம் முன்னேறி ஸ்ரீலங்காவின் வானிண்டு ஹசரங்காவுடன் முதல் இடத்தினை பிடித்து இருக்கிறார். இறுதிப்போட்டியில் க்ளாசன் மற்றும் மில்லர் விக்கெட்களை வீழ்த்தியது இதற்கு முக்கிய காரணமாகி இருக்கிறது.

இந்த பிரிவில் முதலிடத்தினை பிடித்த முதல் இந்திய வீரராக மாறி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. உலக கோப்பை தொடர் முழுவதும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். 144 ரன்களை அடித்த ஹர்திக் பாண்டியா ஸ்ட்ரைக் ரேட்டாக 150 வைத்து இருக்கிறார். 11 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

இறுதி போட்டியில் 16 ரன்கள் எடுத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி என்ற கடுமையான நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு வழி காட்டியவர் ஹர்திக். மார்கஸ் ஸ்டோனிஸ், சிக்கந்தர் ராசா, ஷகிப் அல் ஹசன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஒரு இடம் முன்னேறி ஹர்திக் பாண்டியாவினை தொடர்ந்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Trending

Exit mobile version