இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 19) நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற பயிற்சியில் இந்திய வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை வானிலை வீரர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக நேற்றைய பயிற்சி மூன்று கட்டங்களாக நடைபெற்றன.
இதில் வீரர்கள் கடும் வெயிலிலும் வியர்வை வழிய தீவிர பயிற்சி செய்தனர். பயிற்சியில் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவும், அனைவரின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையிலும், இந்திய அணிக்கான ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் வித்தியாசமான பயிற்சிக்கு திட்டமிட்டு இருந்தார். அதன்படி இந்திய வீரர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களும் மற்றொரு பிரிவில் பேட்டர்களும் இடம்பெற்று இருந்தனர்.
இரு குழுவுக்கும் தனித்தனி பயிற்சி போட்டி அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் இரு குழுக்களில் எந்த குழு குறைந்த தவறு செய்தது என்ற அடிப்படையில் வெற்றியாளர் குழு தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்றைய பயிற்சி போட்டியில் விராட் கோலி அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது என ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் தெரிவித்தார்.
தற்போது இரு அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 68.52 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வங்கதேசம் அணி 45.83 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதன்பிறகு இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…