Cricket
டி20 அணி தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமணன் நியமனம்… அப்படின்னா கம்பீர்..?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகின்றார். மேலும் தேசிய அகாடமியின் தலைமை ஆலோசராக விவிஎஸ் லட்சுமணன் இருந்து வருகின்றார். இந்திய அணி வரும் நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றது.
டி20 இந்தியா அணி சூர்யகுமார் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய டி20 கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவிற்கு நவம்பர் 8, 10, 13 மற்றும் 15ஆம் தேதிகளில் விளையாட உள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி 10 மற்றும் 11ம் தேதிகளில் புறப்பட இருக்கின்றன. இதனால் கௌதம் கம்பீர் டி20 அணியுடன் தென் ஆப்பிரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தேசிய அகாடமியின் தலைமை ஆலோச லஷ்மண் டி20 டெஸ்ட் தொடருக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
கௌதம் கம்பீர் இந்திய டெஸ்ட் அணியுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்ல இருக்கின்றார். மேலும் லஷ்மண் உடன் இணைந்து சாய்ராஜ் பகதுலே, ஹிஷ்கேஷ் கனித்கர், சுபாதீப் கோஷ் போன்ற கோச்சிங் ஸ்டாஃப்களும் தென்னாபிரிக்கா செல்ல இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.