வாஷ்-அவுட் மோடிற்கு சென்ற வாஷிங்கடன் சுந்தர்…குல்தீப் நீக்கம் சரிதானோ?…

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் பல ஆண்டுகளாக தனது தரத்தை விளையாட்டில் காட்டி வருகிறது நியூஸிலாந்து அணி.  3 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது அந்த அணி.

முதல் போட்டியில் இந்திய அணியை பெங்களூருவில் வைத்து மண்னைக் கவ்வ வைத்தது நியூஸிலாந்து. அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணியை,  தனது அபாரமான திறனால் தோல்வியடையச் செய்து படுகுழியில் தள்ளியிருந்தது நியூஸிலாந்து.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று துவங்கியது.போட்டி துவங்கியதும் இந்திய அணியின் ஆப்-ஸ்பின்னர் அஷ்வின் தனது பந்து வீச்சால் நியூஸிலாந்து வீரர்களுக்கு ஆப்பு வைத்தார். தடுமாற்றத்துடனே தனதுஇன்றைய ஆட்டத்தை துவங்கிய நியூஸிலாந்து சிறுதி நேரத்திற்கு பிறகு பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கியது.

நியூஸிலாந்து அணியை இந்தப் போட்டியில் வாஷ் – அவுட் செய்தே தீருவேன் என்ற எண்ணத்தில் தனது பந்து வீச்சினை துவக்கினார் வாஷிங்டன் சுந்தர்.

Test Match

அவரது சுழலில் சிக்கி நியூஸிலாந்து அணி சின்னாபின்னமானது. 23.1 ஓவர்களை மட்டுமே வீசியிருந்த வாஷிங்டன் சுந்தர் 59 ரன்களை விட்டுக்கொடுத்து நியூஸிலாந்து அணியின் 7 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் போட்டியில் சதமடித்திருந்த ரச்சின் ரவீந்தரா, டேரல் மிச்சல், டாம் பிள்ன்டல், க்ளென் பிலிப்ஸ், சான்ட்னர், டிம் சவுதி, அஜாஷ் பட்டேல் என 7 விக்கெட்டுகளை தனது மாயாஜால பந்து வீச்சினால் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.

தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 9 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். 11 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா 16 ரன்களை எடுத்து 1விக்கெட்டை இழந்து நிதானமாக ஆடியது முதல் நாளான இன்று ஆட்ட நிறைவு வரை.

துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஷ்வல் 25 பந்துகளில் 6 ரன்களையும், சுப்மன் கில் 32 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகிறார் ராகுலுக்கு பதிலாக இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள சுப்மன் கில். வாஷிங்டன் சுந்தரின் அபார பந்து வீச்சால், இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தை துவக்கியிருக்கிறது இந்தியா.

கடந்த போட்டியில் விளையாடிய குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை நியாயப் படுத்தி விட்டார் அவர் இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது.

sankar sundar

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

2 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

2 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

2 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

2 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

2 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

2 weeks ago