கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தில் மூன்றாவது நாளாக பேரிடர் குழுவால் மீட்புப்பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதில் இன்னமும் 200 பேரின் நிலைமை என்ன ஆனது எனத் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் வயநாட்டு பகுதியில் இருக்கும் முண்டகை கிராமத்தில் செவ்வாய் அதிகாலை 2 மணி மற்றும் நான்கு மணிக்கு ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரள மாநிலமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இதில் 282 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 200க்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 பேரின் நிலைமை என்னவென்பதே தெரியவில்லை எனவும் மீட்பு குழுவிலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருந்தும் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் கடும் மழை பெய்ததால் மீட்பு பணியை ராணுவம் நிறுத்தி வைத்திருந்தது. இருந்தும் முண்டகை பகுதிக்கு செல்லும் தற்காலிக பாலத்தை அமைக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. தற்போது தற்காலிக பாலம் முடிந்திருக்கும் நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள முதல்வர் பினராய் விஜயன், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று வயநாடு பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரளாவிற்கு பல மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியாக மீட்பு குழுவும் பயணம் செய்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…