கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ள சோகம் நாட்டையே பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு வயநாட்டின் மூன்று இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து இந்த மூன்று இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட தூங்கிக்கொண்டிருந்த மக்கள் இதில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.
முண்டக்காயில் தான் முதன் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. சூரல்மலை மற்றும் மெப்பாடியில் அடுத்தடுத்து இயற்கை தனது ருத்ரதாண்டவத்தை ஆடியிருக்கிறது. இந்த இயற்கை பேரிடரால் இதுவரை நூற்று அறுபது பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லபடுகிறது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருப்பதால் பலி எண்ணிகை கூடலாம் என்ற அபாயமும் மேலோங்கியுள்ளது.
கேரளா மாநிலம் வயநாட்டில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு, மீட்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மழை அதிகமாக பெய்ததனால் சேற்றின் உயரம் அதிகரித்திரிக்கிறது. இதனால் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அதனாலும் கூட பலி எண்ணிக்கை உயராலாம் என அஞ்சப்படுகிறது. ஒரே நாள் இரவில் நடந்தேறிய இந்த சோக நிகழ்வு, பலரது வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டிருக்கிறது. வயநாட்டை சுற்றி ஒலிக்கத் துவங்கிய மரண ஓலம் இன்னும் குறைந்தபாடில்லை.
தேடுதல் வேட்டைக்குப் பின் மீட்டெடுக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிட்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரப்படுகிறது. ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்களுக்குத் தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. பலியானவர்களில் ஒன்பது பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…