Connect with us

latest news

“வாய்ப்பில்ல ராஜா!” – மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விஜயபிரபாகரன்.. கைவிரித்த தேர்தல் ஆணையம்!

Published

on

விருதுநகர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த விஜய பிரபாகரன், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியைத் தழுவினார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக விஜயபிரபாகரனின் தாயாரும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா குற்றம்சாட்டியிருந்தார். ’

இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்தநிலையில், வவிருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது என்றும் தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. 5 நிமிடத்தில் காலியான டிக்கெட்டுகள்.. பயணிகள் ஏமாற்றம்..!

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அதிகளவு ரயில் பயணத்தை விரும்புவார்கள். ஏனென்றால் பஸ் கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், குறித்த நேரத்திற்கு பயணம் என்பதாலும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஆசைப்படுவார்கள். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 28, 29, 30 தேதிகளில் சொந்த ஊர் செல்வதற்கு திட்டமிடுவார்கள் என்பதால் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. அதன்படி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 29ஆம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு திங்கட்கிழமை காலை தொடங்கி விரைவாக விற்றுதீர்ந்து விட்டது.

இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் 5 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை விரைவு ரயில் போன்றவற்றில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் இரண்டு நிமிடத்திலேயே முன்பதிவு முடிந்து விட்டது. அக்டோபர் 31ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

india

இந்தியர்கள் ஆண்டு வருமானத்தினை விட மூன்று மடங்கு இதுக்கு தான் அதிக செலவு செய்றாங்களாம்!

Published

on

By

அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிகம் செலவு செய்வது என்னவோ கல்விக்கு இல்லாமல் திருமணத்துக்கு தான் என்ற ஆய்வு முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய குடிமகன்கள் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, மளிகை பொருட்களை விட திருமணத்துக்கு தான் அதிக செலவு செய்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி திருமணத்துக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது. மேலும், இது கல்விக்கு ஆகும் செலவை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ஜெப்ரீஸ் நிறுவனம் இந்தியர்கள் செய்யும் செலவுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகையில், இந்தியாவில் திருமணத்துக்கு மட்டுமே 10 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு திருமணத்திற்கும் 12.5 லட்சம் வரை சராசரியாக செலவு செய்யப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 4 லட்சமாக இருக்க அவர்கள் மூன்று மடங்கு அதிகமாக ஒரு திருமணத்திற்கு செலவு செய்கின்றனர். தனி நபரின் ஆண்டு வருமானத்தினை கணக்கிடும் போது இது ஐந்து மடங்காக இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண செலவில் 30 சதவீதம் ஆடைகள் மற்றும் நகைகள் வாங்க செலவாகிறது. உணவு பொருட்களுக்கு 20 சதவீதம் செலவு செய்யப்படுகிறது. இதை விட போட்டோகிராபி, மேக்கப் உள்ளிட்ட ஆடம்பரங்களுக்கே அதிக அளவு இந்திய திருமணங்களில் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு உலக கோப்பைகள் கொடுத்த முக்கிய கேட்சுகள்… கபில்தேவ் முதல் சூர்யகுமார் வரை…

google news
Continue Reading

india

‘கூகுள் மேப்’ பொய் சொல்லாதுடா..! காரோடு ஆற்றுக்குள் பாய்ந்த இளைஞர்கள்.. நூலிலையில் எஸ்கேப்..!

Published

on

கேரள மாநிலத்தில் கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்ற இளைஞர்கள் ஆற்றல் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

google மேப் என்பது ஒரு புவியியல் தகவல் தொழில்நுட்பம் மென்பொருள். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இரு சக்கரங்களிலோ அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு ஆப். செல்ல வேண்டிய இடத்திற்கு சாலை உள்ளிட்ட அனைத்தையும் கூகுள் மேப் காட்டி விடுவதால் நமக்கு தெரியாத இடத்திற்கு கூட எளிதில் நம்மால் சென்று விட முடியும்.

இருப்பினும் ஒரு சில சமயங்களில் கூகுள் மேப் தவறான வழியை காட்டி விடுகின்றது. இதனால் மிகப்பெரிய விபத்தும் சிக்கலும் ஏற்படுகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கின்றது. அதாவது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு என்ற பகுதியை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும்  தஷ்ரீப் இருவரும் கர்நாடக மாநிலம் ஒப்பினங்கில் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்று இருக்கிறார்கள்.

அவர்கள் google map உதவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது குட்டிகோல் பல்லாஞ்சி என்ற ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றார்கள். google மேப் புதியதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல் ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை காட்டியுள்ளது. அதை பின்பற்றி இருவரும் காரில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை.

இதனால் அவர்களது கார் திடீரென்று ஆற்றுக் கொள் பாய்ந்து விட்டது. அவர்களது கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சிறிது தூரம் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து செடிகளில் கார் மாட்டி நின்றுவிட்டது. இதனால் இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்து விட்டார்கள்.

உடனே தங்களது உறவினருக்கு போன் செய்து தகவலை தெரிவித்த பிறகு அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளத்தில் மாட்டி இருந்த அப்துல் ரஷீத் மற்றும் தஷீத் ஆகிய இருவரையும் மீட்டனர்.  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் ஆற்றின் நடுவே சிக்கிய காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் தப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

latest news

இஸ்லாமியருக்கு ஒரு இனிப்பான செய்தி.. ஹஜ் பயணிகளுக்கு ரூ.25,000.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு..!

Published

on

ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து இருக்கின்றார்.

ஹஜ் பயணம் என்பது இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு புனித பயணம். இஸ்லாமியர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் தங்கள் கடமைகளில் ஒன்றாக சவுதி அரேபியாவில் இருக்கும் மெக்காவிற்கு புனித பயணம் செல்வதை கருதுகிறார்கள். வருடம் தோறும் பல இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணித பயணம் மேற்கொள்வது வழக்கம்தான்.

தமிழ்நாட்டில் இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5801 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய 326 பேருக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்று இருந்தார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது “இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம். இந்த கடமையை நிறைவேற்ற தமிழ்நாட்டில் இருந்து 5801 பேர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் முக ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் ஹஜ் கமிட்டி சார்பாக அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தோம்.

தற்போது பயணத்தை மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய முதல் குழுவினரை வரவேற்கிறோம். அது மட்டும் இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் இந்த ஆண்டு முதல் 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம்” என்று அவர் பேசியிருந்தார்.

google news
Continue Reading

latest news

ரூபாய் 10,000 பரிசு..? அரசு பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு ஜாக்பாட்.. வெளியான லிஸ்ட்..!

Published

on

அரசு பேருந்தில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதம் 13 பேரை தேர்வு செய்து காசோலை வழங்கப்படுகிறது. அதன்படி ஜூன் 2024 மாதத்திற்கான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கலகம் சார்பாக தொலைதூரப் பேருந்துகளில் மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்பதற்காக https://www.tnstc.in என்ற டிஎன்எஸ்டிசி செயலியை பயணம் முன்பதிவு செய்வதற்கு பயன்பாட்டிற்கு வைத்திருக்கின்றது. இதன் மூலமாக மக்கள் தொலைதூரங்களில் செல்வதற்கு முன்கூட்டியே டிக்கெடுகளை பதிவு செய்து கொள்ள முடியும்.

வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை தவிர்த்து இதர நாட்களில் பயணிக்கும் பயணிகளில் 13 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அதில் முதல் மூன்று பயணிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை கடந்த ஜனவரி 2024 முதல் தொடங்கி அதனை செயல்படுத்தி வருகின்றது தமிழக அரசு.

இந்த திட்டத்தின் மூலமாக அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதம் இதனை செய்து வருகின்றது. அந்த வகையில் ஜூன் 2024 முதல் 13 பயணிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதில் முதல் மூன்று பயணிகளுக்கு தலா 10,000 ரூபாயையும், மற்ற 10 பயணிகளுக்கு ரூபாய் 2000-ம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 2024 மாதத்திற்கான 13 பயணிகளை கணினி குழுக்கள் முறையில் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு மேலாண் இயக்குனர் டாக்டர் ஆர் பி ஜான் அவர்கள் நேற்று தேர்வு செய்தார். இந்த பயணிகளின் பெயர்கள் மற்றும் பயணச்சீட்டு எண் என அனைத்தும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இவர்களுக்கு பரிசு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

Trending